» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:49:25 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 24ஆம் தேதி திங்கள்கிழமை துவங்கப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழக அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB, SSC, RRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 821 காலிப் பணியிடங்களுக்கு TNPSC Group-II & II-A முதல்நிலை தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த TNPSC Group - II & II-A முதல்நிலை தேர்வானது வரும் 01.11.2026 அன்று நடைபெறும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 09.09.2026. இந்த தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24.08.2026 திங்கள்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்புத்துறையின் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் Thoothukudi Employment Office என்ற Telegram சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் 0461 - 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNPSC Group - II & II-A முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:23:02 PM (IST)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)








