» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)
தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து, அதைச் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் ஆகப் பதிவிட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (22), அமுதா நகரைச் சேர்ந்த பிரகாஷ் (23), சுடலை காலனியைச் சேர்ந்த குரு (21) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று முன்தினம் அலெக்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு, மூவரும் சேர்ந்து யூடியூப்பைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளனர்.
தயாரித்த குண்டை திறந்தவெளியில் வெடிக்கச் செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். பின்னர், பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக அந்த வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ், பிரகாஷ், குரு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
யூடியூப்பைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து பயிற்சி எடுத்தோம். எங்கள் பகுதியில் சிலரிடம் கெத்து காட்டுவதற்காக இதைச் செய்தோம்" என கைதானவர்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இளைஞர்களின் வீடுகளில் மேலும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா எனப் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வீடுகளில் வேறு வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்தார்களா அல்லது வேறு ஏதேனும் சதித்திட்டம் தீட்டினார்களா என்ற கோணத்தில் தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:23:02 PM (IST)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)

தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க வீ தி லீடர்ஸ் அமைப்பின் 3-வது வார தூய்மைப் பணி!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:55:43 PM (IST)








