» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க வீ தி லீடர்ஸ் அமைப்பின் 3-வது வார தூய்மைப் பணி!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:55:43 PM (IST)

தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில் தொடர்ந்து 3-வது வாரமாக இன்று தூய்மைப் பணியும், அதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமும் நடைபெற்றது.
ஏற்கனவே நெல்லை குறுக்குத்துறை, பேராத்து செல்வி அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்த வாரம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கல் மண்டபம் பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆற்றங்கரை மற்றும் படித்துறைப் பகுதிகளில் தேங்கியிருந்த பழைய துணிகள், மது பாட்டில்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. படித்துறையில் அடர்த்தியாக வளர்ந்திருந்த அமலைச் செடிகளும், ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்திருந்த கருவேல மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன.
சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனப் பலரும் இதில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். தூய்மைப் பணியைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி கோவில் எதிரே 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தாமிரபரணியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில் வரும் வாரங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தூய்மைப் பணிகளும் தொடர்ந்து நடைபெறும் என அமைப்பின் தன்னார்வலர் ச.வேல்கண்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:23:02 PM (IST)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)








