» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் உப்பாற்று ஓடையில் எலும்புக்கூடு மீட்பு — எஸ்பி சிவபிரசாத் நேரில் விசாரணை!

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:38:52 PM (IST)

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் பாதசாரிகள் பூங்கா அருகே உப்பாற்று ஓடை அமைந்துள்ளது. இன்று மாநகராட்சி சார்பில் ஜேசிபி வாகனம் மூலம் ஓடையில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது, தேங்கியிருந்த நீர் குட்டையில் கழிவுகளை அள்ளிய போது, அதில் மனித எலும்புக்கூடு ஒன்று வெளிப்பட்டதைக் கண்டு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து உடனடியாகத் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் எலும்புக்கூட்டைக் கைப்பற்றினர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு பார்வையிட்டார். 

மீட்கப்பட்ட சடலம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் எனக் கூறப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்டு உடல் இங்கு வீசப்பட்டதா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எதிர்பாராதவிதமாக ஓடையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற பல கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory