» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புனித லசால் பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி: பியர்ல்ஸ் பள்ளி அணி சாம்பியன்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:58:36 PM (IST)

தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 40-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், 40-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் மாணவரும், தூத்துக்குடி பனிமய மாதா பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான ஜான்செல்வம் தலைமை தாங்கினார். எட்டையபுரம் முதுநிலை வருவாய் ஆய்வாளரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான பால்ராஜ் முன்னிலை வகித்தார்.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பொறியாளர் ராகுல், முன்னாள் இந்தியக் கால்பந்து வீரர் ஆர்லாண்டோ ராயன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான அருட்சகோதரர் யேசுதாசன் நினைவு கால்பந்தாட்டப் போட்டி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி மற்றும் ஆறுமுகனேரி பியர்ல்ஸ் பள்ளி அணிகள் மோதின.
இதில், 4-0 என்ற கோல் கணக்கில் பியர்ல்ஸ் பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது. அந்த அணிக்கு யேசுதாசன் நினைவு கோப்பை மற்றும் ரூ.15,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற பியர்ல்ஸ் பள்ளி அணிக்கு தாமஸ் மஸ்கர்னாஸ் - சம்மனசு அம்மாள் மஸ்கர்னாஸ் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.7,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் இருதயராஜ் மஸ்கரானாஸ், இயக்குனர் பெர்டினான்ட், உதவி இயக்குனர்கள் ஜான்பால், ராபர்ட், செயலாளர் ஜெனாப், பொருளாளர் ஞானசேகரன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க சட்டம்: மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:40:01 AM (IST)

தூத்துக்குடியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:22:06 AM (IST)

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)








