» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் : 3 விசைப்படகுகளுடன் தேடும் பணி தீவிரம்!

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:28:01 PM (IST)

தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில், கடந்த 15.08.2026 அன்று இரவு 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் இருந்த முத்துப்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (45) என்ற மீனவர் எதிர்பாராத விதமாகத் தவறி கடலில் விழுந்துள்ளார்.

ஆழ்கடலில் மாயமான மீனவர் முத்துக்குமாரைக் கண்டறியும் பொருட்டு, 3 விசைப்படகுகளில் சக மீனவர்கள் கடலுக்குச் சென்று அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மீனவ கிராம மக்களிடையே பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory