» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கள்ளக்காதல் தகராறில் காவலாளி வெட்டிக்கொலை — இளஞ்சிறார் கைது - கோவில்பட்டியில் பயங்கரம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 12:37:25 PM (IST)
கோவில்பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் காவலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இளஞ்சிறாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்தவர் கோபால் மகன் ராமச்சந்திரன் (45). இவர் கொப்பம்பட்டியில் உள்ள நியூட்டன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தைப் பராமரித்து, மாடுகளையும் கவனித்து வந்தார். மேலும், இரவு நேரங்களில் தோட்டத்திலேயே தங்கிப் தூங்குவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மாலை தனது வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு கொட்டகையில் படுத்துத் தூங்கியுள்ளார். இன்று காலை நீண்ட நேரமாகியும் ராமச்சந்திரன் எழுந்து வராததால் சந்தேகமடைந்த நிலத்தின் உரிமையாளர் நியூட்டன் அங்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, ராமச்சந்திரன் அருவாளால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து உடனடியாகக் கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்ற பெண்ணிற்கும் இடையே கள்ளக்காதல் தொடர்பு இருந்து வந்ததும், இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இசக்கியம்மாளின் அக்கா மகனான இளம் சிறார் ராமச்சந்திரனை அருவாளால் வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கொலையில் ஈடுபட்ட சிறுவனைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமச்சந்திரனின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் கொப்பம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க சட்டம்: மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:40:01 AM (IST)

தூத்துக்குடியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:22:06 AM (IST)

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)








