» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இருதரப்பினர் இடையே மோதல்: 5பேர் மீது வழக்குப் பதிவு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 12:33:02 PM (IST)
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் நள்ளிரவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 5நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகராஜ் என்ற சடை (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் காவல் நிலைய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து 2 நாட்களே ஆகிறது. இந்நிலையில், நேற்றிரவு சண்முகராஜ், அவரது கூட்டாளிகளான நேதாஜி நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம், தேவர் காலனியைச் சேர்ந்த இனியராஜ் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஷிப்பிங் நிறுவன ஊழியர் ஆறுமுகன் (26), மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் (24) ஆகியோருக்கும், சண்முகராஜ் குழுவினருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு உருவானது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த இருதரப்பினரும் தெருவில் கிடந்த கற்களைக் கையில் எடுத்துக்கொண்டு மாற்றி மாற்றி எறிந்து கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
இந்தத் மோதலில் இருதரப்பையும் சேர்ந்த நபர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காமராஜன் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆறுமுகன், பிரகாஷ், மற்றொரு தரப்பைச் சேர்ந்த சண்முகராஜ், இனியராஜ், மாரிச்செல்வம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், மாரிச்செல்வம் என்பவர் பக்கத்து வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் இரண்டு நாயை கல்லால் அடித்து கொன்றவர். மேலும் இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க சட்டம்: மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:40:01 AM (IST)

தூத்துக்குடியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:22:06 AM (IST)

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)








