» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)
மதுரை கோட்டத்தில் நடைபெறவுள்ள தண்டவாளப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அவ்வழியாக இயங்கும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படவுள்ளதாகத் திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் (16321):
வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை 8:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில், விருதுநகரில் இருந்து திண்டுக்கல் வழியே செல்லாமல் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாகக் கரூர் சென்றடைந்து, பின்னர் கோவைக்கு இயங்கும். அன்றைய தினம் இர்ரயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாளையம் ஆகிய நிலையங்கள் வழியாகச் செல்லாது.
நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் (16352):
வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி காலை 6:15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரயில், மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாகத் திருச்சி சென்று மும்பைக்கு இயங்கும். அன்றைய தினம் இர்ரயில் திண்டுக்கல் வழியாகச் செல்லாது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)








