» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை

புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

pattakaraiThiruvilakku.jpg

குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரை பத்திரகாளி அம்மன் கோயிலில் 2,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரை பத்திரகாளி அம்மன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் 2-ஆவது செவ்வாய்க்கிழமையன்றும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத திருவிளக்கு பூஜை ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டன.

தொடர்ந்து, மழை வேண்டி 2,008 விளக்குகள் ஏற்றித் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பெண்கள் "ஓம் சக்தி, பராசக்தி" என முழக்கமிட்டு அம்மனை வழிபட்டனர். இப்பூஜையில் மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஏரல், தென்திருப்பேரை, நாசரேத், சாத்தான்குளம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சந்திரம்மாள் பூஜையை நடத்தி வைத்தார். இதில் கோயில் நிர்வாகிகள் ஜெயராகவன், விஜயராகவன் மற்றும் சிற்பி கணேசன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாசரேத் முத்துக்குமார் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory