» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1,190 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டவிரோதமாக மதுபானங்களை வைத்து விற்பனை செய்த, தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ஜான் பாண்டியன் (58) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜான் பாண்டியனிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,190 மதுபாட்டில்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு ஆதரவு : தூத்துக்குடியில் பா.ஜ.க. விவசாய அணி தீர்மானம்
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:51:56 PM (IST)








