» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசன நேரம் மாற்றம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:22:37 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசன நேரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.சமீபத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையில், கட்டண தரிசனத்தில் மாலை 6:30 மணி வரையிலும், பொது தரிசனத்தில் இரவு 7:00 மணி வரையிலும் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
வழக்கமாக இரவு 9:00 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தத் திடீர் நேரக் கட்டுப்பாடு பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, பழைய நடைமுறைப்படியே பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் எழுந்தன. பக்தர்களின் இந்த அதிருப்தியைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பழைய அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு, தளர்வுகளுடன் கூடிய புதிய நேர ஒதுக்கீடு அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின் விவரங்கள்:
தினசரி நடை திறப்பு: தினமும் காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இரவு நேரக் கட்டுப்பாடு: இரவு 8:00 மணி வரை பக்தர்கள் தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நேரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அதிகாலை 4:00 மணிக்கே நடை திறக்கப்பட்டுப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
விசேஷ நாட்கள்: விசேஷ மற்றும் திருவிழா நாட்களில் வழிபாட்டு நேரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது.
மக்கள் கருத்து
JeevaAug 12, 2026 - 11:27:37 AM | Posted IP 162.1*****
கோவில் நிர்வாகத்தில் முடி காணிக்கை செழித்தும் இடம்
பணியாளர்கள் காசு வாங்குவதில் தான் குறியாய் இருக்கிறார்கள் தேவையில்லலாமல் அலைய விடுகிறாங்கள் அங்க போங்க இங்க போங்கன்னு டீ சாப்பிட போறம் சாப்பாடு சாப்பிட போறம்னு சொல்லி டைம் வேஸ்ட் பண்றங்க
G.PitchaiahAug 11, 2026 - 01:08:25 PM | Posted IP 162.1*****
Tiruchendur murugarukku arogara
கடவுளைAug 11, 2026 - 12:27:50 PM | Posted IP 104.2*****
கோவிலில் தேடுவது தான் நம்ம பிரச்சினை
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)









BabuAug 13, 2026 - 07:13:56 AM | Posted IP 104.2*****