» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலவச மருத்துவ முகாம்: போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:20:17 AM (IST)

தூத்துக்குடி வடபாகம் காவல்துறை மற்றும் சித்தா கிளினிக் சார்பில் போதை விழிப்புணர்வு மற்றும் இலவச கண் மருத்துவ முகாம் வட்ட கோவில் அருகில் உள்ள சித்தா கிளினிக் வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு டாக்டர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ் தலைமை வகித்து கண் மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். முன்னதாக அனைவரும் போதைக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
டாக்டர் ஜீவ அனுசியா மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஏற்பாடுகளை மேலாளர் ராமராஜ், வணிக மேலாளர் கார்த்திகேயன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)









பொதுமக்களின் ஒருவன்Aug 11, 2026 - 09:06:35 PM | Posted IP 104.2*****