» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:35:18 AM (IST)
ஆறுமுகநேரியில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற இளைஞரை லத்தியால் தாக்கிய சம்பவத்தில், காவலர்கள் இருவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் ஆறுமுகநேரி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆறுமுகநேரி மேலத் தெருவைச் சேர்ந்த அரசகுமார் மகன் விக்னேஷ் (25) மற்றும் அவரது நண்பர் சூர்யா ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் நோக்கிச் சென்றுள்ளனர். காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காண்பித்தும், அதனை கவனிக்காமல் அவர்கள் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனே காவல்துறையினர் லத்தியால் தாக்கியதில் விக்னேஷின் கண் இமை பகுதியில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றித் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கண் இமையில் 9 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாக்குதலால் அவரது பார்வைத் திறனும் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தீவிர விசாரணை நடத்தினார்.விசாரணையின் அடிப்படையில், ஆறுமுகநேரி காவல் ஏட்டு கஜேந்திரன் (43) மற்றும் காவலர் காளி (31) ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)









ஒருவன்Aug 11, 2026 - 08:50:18 AM | Posted IP 172.7*****