» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வடமாநிலத் தொழிலாளர்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 2பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:57:05 AM (IST)
தூத்துக்குடியில் மின்சாரக் கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டில் வடமாநிலங்களைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கி வசித்து வருகின்றனர். இவர்கள் தூத்துக்குடியில் அமைந்துள்ள மின்சாரக் கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தொழிலாளர்கள் வீட்டின் உள் தூங்கிக் கொண்டிருந்தபோது, 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளையும் கற்களையும் வீசித் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடியது.
இத்தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. வீட்டின் வெளிப்புறத்தில் உலர்த்தப்பட்டிருந்த துணிகள் தீப்பற்றி எரிந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலையப் பகுதியினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த சரத் (20) மற்றும் ஹரிகார்த்திக் (19) ஆகிய இருவரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 4 பேரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)









ஆண்டAug 11, 2026 - 12:36:05 PM | Posted IP 162.1*****