» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:30:00 AM (IST)

kanjarrestAug6.jpg

தூத்துக்குடியில் விற்பனைக்காக 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவரை மத்திய பாகம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் எல்லைக்குட்பட்ட தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்துச் சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் விற்பனை செய்வதற்காக 1.200 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி நேதாஜி நகர் 2-வது தெரு சொர்ணபாண்டி மகன் சோலைகுமார் (32), அதே பகுதி 4வது தெருவைச் சேர்ந்த ராஜசிங் மகன் ஜெர்ரிஸ் (33) என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory