» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் கல்லூரியிடமிருந்து மாணவனின் அசல் சான்றிதழ்கள் மீட்பு: மக்கள் நீதிமன்றம் அதிரடி!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 7:37:50 AM (IST)

TCstudenti.jpg

தனியார் கல்லூரியில் சிக்கியிருந்த மாணவனின் டிசி உள்ளிட்ட அசல் சான்றிதழ்கள் தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலையீட்டால் உடனடியாக மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஓசநூத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமோடியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த தனது பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ் (TC) உள்ளிட்ட அசல் கல்விச் சான்றிதழ்களைத் திரும்பப் பெற்றுத் தரக் கோரி, தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை 04.08.2026 அன்று விசாரணை செய்த நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும் அமர்வு நீதிபதியுமான பி.வி. வஷீத்குமார், மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, நேற்று இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 

நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், மாணவனின் அசல் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் கல்லூரி நிர்வாகத்தால் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முன்பாக மாணவரிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் இம்மனுவிற்குத் தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.

இவ்வழக்கின் முடிவில் அமர்வு நீதிபதி/தலைவர் தெரிவிக்கையில், "கல்வி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சார்ந்த குறைகள் எதுவாக இருப்பினும், பொதுமக்கள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம். இங்கு எவ்வித கட்டணமுமின்றிப் புகார்களுக்குச் சுமூகமான முறையில் தீர்வு காணலாம்" எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory