» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காளியம்மன், கருப்பசாமி உருவத்தில் முளைப்பாரி ஊர்வலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 7:32:50 AM (IST)

mulaipparivilathi.jpg

விளாத்திகுளத்தில் நடைபெற்ற கோவில் ஆடிக் கொடை விழாவில், ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பசாமியின் முழு உருவத்தில் வளர்க்கப்பட்ட தத்ரூப முளைப்பாரி ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ பைரவசாமி திருக்கோவிலில் இந்த ஆண்டிற்கான ஆடிக் கொடை விழாவையொட்டி, காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி மற்றும் விநாயகரின் உருவங்களை தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் வகையில் முளைப்பாரி வளர்த்திருந்தனர். பக்தர்களின் பக்தி உணர்வையும் நேர்த்திக்கடனையும் வெளிப்படுத்தும் வகையில் கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த முழு உருவ முளைப்பாரிகள், காண்போரைக் பெரிதும் கவர்ந்தன.

கோவிலில் சுவாமிக்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டது. இவ்வூர்வலம் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, எட்டயபுரம் ரோடு, மார்க்கெட் ரோடு மற்றும் விளாத்திகுளம் பேருந்து நிலையம் வழியாகச் சென்று, இறுதியாக வைப்பார் ஆற்றுப்பாலம் பகுதியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முளைப்பாரிகளைத் தரிசித்து அருள் பெற்றனர்.

இந்த ஆடிக் கொடை விழாவில் விளாத்திகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory