» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மரத்தடி விழுந்ததில் தொழிலாளி பரிதாப சாவு
புதன் 5, ஆகஸ்ட் 2026 11:29:40 AM (IST)
தூத்துக்குடியில் மரத்தடிகளை லாரியில் ஏற்றும் போது சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் ஆறாவது தெருவில் வசிப்பவர் தங்கமுத்து. இவரது மகன் சுந்தரபாண்டி (57). இவர், தூத்துக்குடி புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கண்டெய்னர் நிறுவனத்தில் காண்ட்ராக்ட் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் மரக்கட்டைகளை மொத்தமாக பெல்ட் மூலம் கட்டி லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததில் மரக்கட்டைக்குள் சிக்கிமயக்கம் அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)








