» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடி மாநகரில் வருகிற 16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது எனத் மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களுக்கு மின் விநியோகம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில், வருகிற 16.06.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்பதால், தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாநகரப் பகுதி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை முன்னதாகவே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், அன்றைய தினம் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory