» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கருணாநிதி 103-வது பிறந்தநாள் விழா : கீதாஜீவன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
புதன் 3, ஜூன் 2026 3:22:24 PM (IST)

தூத்துக்குடியில் திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலதிட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் மாநகர திமுக சார்பில் நடைபெற்ற விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். அங்குப் பொதுமக்களுக்குக் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, எட்டையாபுரம் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தின் முன்பாக அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து உத்தியோகப்பூர்வமாக மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், கழக இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்த முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், அப்பகுதியைச் சேர்ந்த 200 ஏழை எளிய மக்களுக்கு 3 அடுக்கு எவர்சில்வர் டிபன்கேரியர் பாத்திரங்களை நலத்திட்ட உதவியாக வழங்கினார்.

இவ்விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், திராவிடர் கழக மாவட்ட தலைவர் முனியசாமி உட்பட கட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) மற்றும் பொதுமக்கள் எனப் பலர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசிப் பைகள்:
மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகர் ஏற்பாட்டில், தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள 25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்குத் தலா 10 கிலோ வீதம் அரிசிப் பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் நேரில் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசிப் பைகளை வழங்கி, அவர்களின் நலம் குறித்துக் கேட்டறிந்து கலந்துரையாடினார்.
முதியோர் இல்லத்தில் அன்னதானம்:
தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் புதுக்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.ஜெயக்கொடி தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக, வாகைகுளம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சிவந்தி ஆதித்தனார் மன்றம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.ஜெயக்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்குக் கழகக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட பிரதிநிதி வெய்ராஜ் உட்பட ஒன்றிய, மாவட்ட அணி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது - 77 பாட்டில்கள் பறிமுதல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:46:20 PM (IST)

நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் : தென்னக ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 9, ஜூன் 2026 8:37:25 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊதிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 16-ல் தீர்ப்பு!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:32:07 PM (IST)

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)









