» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சர்வதேச யோகா தின விழிப்புணர்வு முகாம் : இயற்கை மருத்துவம், யோகா செயல்விளக்கப் பயிற்சி!
புதன் 10, ஜூன் 2026 3:24:59 PM (IST)

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசுத் துறை அலுவலர்களுக்கான இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாடு முழுவதும் வரும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, தமிழக அரசின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவத் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய சமூக தணிக்கை கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குச் சமூக தணிக்கை மாவட்ட வள அலுவலர் சேகர் தலைமை வகித்தார். சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர்கள் செல்வகுமார், ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் கணேசமூர்த்தி வரவேற்றார்.
இவ்விழிப்புணர்வு முகாமில் கோவில்பட்டி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையின் இயற்கை மற்றும் யோகா சிறப்பு மருத்துவர் திருமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய இயற்கை மருத்துவ முறைகள் குறித்து விளக்கிய அவர், அலுவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய யோகாசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளைச் செயல் விளக்கத்துடன் நேர்த்தியாகக் கற்றுக்கொடுத்தார்.
மேலும், முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் உடலைத் தூய்மையாகப் பேண உதவும் முக்கிய மூலிகைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக கண்ணைச் சுத்தப்படுத்தும் பிரத்யேகக் குவளை, உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் ஆவாரம்பூ பவுடர், ஊட்டச்சத்து நிறைந்த முருங்கை பவுடர் உள்ளிட்ட இயற்கை வாழ்வியல் பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
இப்பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு வட்டார அளவுகளில் பணிபுரிந்து வரும் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாகச் சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் முத்து முருகன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









