» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!

புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)



ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ஏரல் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரை போலீசார் கைது செய்து, 29 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

இதுபோல் ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ஏரலைச் சேர்ந்தவர்களான ஸ்டீபன் (48) மற்றும் செல்வகுமார் (50) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து, 12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் ஆதாம் அலி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory