» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழப்பு!
புதன் 3, ஜூன் 2026 11:51:43 AM (IST)
முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அடுத்த அகரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடத்தி (66). இவர் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மாடத்தி தனது மகள் பேச்சியம்மாள் மற்றும் மகன் அண்ணாமலை ஆகியோரது வீடுகளில் மாறி மாறித் தங்கி வாழ்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
நேற்று வழக்கம்போல் 100 நாள் வேலையை முடித்துவிட்டு, மாலை 06.00 மணியளவில் வீட்டில் இருந்து குளிப்பதற்காகத் தாமிரபரணி ஆற்றிற்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அவர் வழக்கம்போலத் தனது மகள் அல்லது மகன் வீட்டில் தங்கியிருக்கலாம் என உறவினர்கள் நினைத்ததால், நேற்று இரவு அவரை யாரும் தேடவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை மாடத்தி 100 நாள் வேலைக்குச் செல்லவில்லை என்று தெரியவந்ததை அடுத்து, உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பல்வேறு இடங்களில் விசாரித்துத் தேடினர். அப்போது, தாமிரபரணி ஆற்றங்கரையில் மாடத்தி இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக முறப்பநாடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு காவல் ஆய்வாளர், உயிரிழந்த மாடத்தியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகரன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் : தென்னக ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 9, ஜூன் 2026 8:37:25 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊதிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 16-ல் தீர்ப்பு!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:32:07 PM (IST)

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)









