» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
த.வெ.க. ஆட்சி இன்னும் 6 மாதம் இருக்குமா என்பதே கேள்வி : அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி
புதன் 3, ஜூன் 2026 10:59:33 AM (IST)
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு இன்னும் 6 மாதம் இருக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
நடந்து முடிந்த தமிழகச் சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்டுகள், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்து விஜய் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். அவர் கடந்த மாதம் 10-ஆம் தேதி பதவியேற்ற போது, த.வெ.க. ஆட்சிக்கு 6 மாதம் எவ்வித தொந்தரவும் கொடுக்க மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் திருச்சி சென்றிருந்த முதலமைச்சர் விஜய் பேசுகையில், "6 மாதம் அவகாசம் என்றவர்களால் 6 நாள் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை; ஆட்சி அமைத்த அரைமணி நேரத்திலேயே விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்" என்று திமுகவைச் சாடியிருந்தார்.
அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்:
முதல்வர் விஜய்யின் இந்த விமர்சனம் குறித்துத் திருச்செந்தூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்துப் பேசியதாவது: "நாங்கள் நடத்துவது ஒரு பொறுப்பான அரசியல் கட்சி. திமுக ஒரு மாபெரும் அரசியல் கட்சி. மாநிலத்தில் எந்த குற்றம் எப்போது நடந்தாலும் அதனை உடனுக்குடன் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவதுதான் உண்மையான எதிர்க்கட்சிகளின் கடமை.
அந்த கடமையைத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இயக்கத்தின் பெரிய தலைவர்கள் மிகத் துல்லியமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சொல்கிறோம்; 6 மாதம், 8 மாதம், 10 மாதம் என்றெல்லாம் அவகாசம் பேசத் தேவையில்லை. 'இந்த ஆட்சியே இன்னும் 6 மாதம் நீடிக்குமா?' என்ற மிகப் பெரிய கேள்விக்குறி மக்கள் மத்தியில் எழுகின்ற போது, நாங்கள் இன்னும் 6 மாதம் கழித்துக் கேள்வி கேட்பது என்றால் பிறகு யாரிடம் சென்று கேட்பது?
மேலும் தற்போதைய தமிழகச் சூழல் குறித்துப் பேசிய அவர், "போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால்தான் முந்தைய திமுக ஆட்சி வீழ்ந்தது என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள் அல்லவா? ஆனால் இன்றைக்கு மாநிலத்தில் என்ன நடக்கிறது? எத்தனை கற்பழிப்புச் சம்பவங்கள், எத்தனை பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.
மாநிலத்தில் கள்ள லாட்டரி சீட்டு விற்பனை தடையின்றி எப்படி நடக்கிறது? கள்ள லாட்டரி சீட்டுகள் அமோகமாக நடப்பதால், லாட்டரி சீட்டு விற்பனையைத் தமிழ்நாட்டில் மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் திறந்து விடுவதற்கே தற்போதைய அரசு ஒரு திட்டத்தைப் போட்டிருப்பதாகத் உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.
அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இந்த த.வெ.க. ஆட்சியில் வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மன்றத்திலேயே தற்போது மிகப் பெரியதாக எழுந்துள்ளது" என்று அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)

உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகள் : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:18:01 PM (IST)

வ.உ.சி. துறைமுகத்தின் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத் கோரிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:34:56 PM (IST)

தூத்துக்குடியில் மெகா கப்பல் கட்டும் தளம் : தென் கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:08:09 PM (IST)









