» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண் பாலியல் வன்கொடுமை: கைதான தவெக நிர்வாகி கட்சிப் பொறுப்பிலிருந்து அதிரடி நீக்கம்!
புதன் 3, ஜூன் 2026 8:22:00 AM (IST)
ஏரல் அருகே இளம் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தவெக நிர்வாகி பாலசுப்பிரமணியன், கட்சியின் அடிப்படைப் பொறுப்புகள் மற்றும் உறுப்பினர் தகுதியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகப் பொறுப்பில் இருந்து வந்தார். இவரது நண்பரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரும் அக்கட்சியில் நிர்வாகியாக இருந்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தங்களது காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஒரு தனியார் விடுதியில் தங்கி, அந்தப் பெண்ணிற்குத் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், ஆள் கடத்தல், ஏமாற்றுதல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குத் தவெகவில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கட்சியின் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கைதான பாலசுப்பிரமணியனை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் உடனடியாக நீக்கி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தூத்துக்குடி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான அன்னை வி.ஜி. சரவணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









