» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிக கட்டணம் வசூலித்த 3 மினி பஸ்களுக்கு அபராதம் : 4 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்!
புதன் 3, ஜூன் 2026 8:13:16 AM (IST)
கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, அதிக கட்டணம் வசூலித்த 3 மினி பஸ்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
கோவில்பட்டியில் மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதன் அடிப்படையில் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா, மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று மதியம் அண்ணா பஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் சந்திப்பு, ரெயில் நிலையம், கடலையூர் ரோடு ஆகிய பகுதிகளில் மினி பஸ்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிக கட்டணம் வசூலித்த 3 மினி பஸ்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூடுதல் கட்டண வசூலித்தாலோ அல்லது விதிமுறைகளை மீறினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் 4 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஏர்ஹாரன்களை பஸ்களில் இருந்து அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









