» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனிக்கட்சித் தொடங்க அண்ணாமலை திட்டம்? ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் சலசலப்பு!
செவ்வாய் 2, ஜூன் 2026 8:20:42 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரது பிறந்தநாளையொட்டி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
முன்னாள் எஸ்பி அதிகாரியான அண்ணாமலை, கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் அக்கட்சியின் மாநிலத் தலைவராக உயர்ந்த அவர், சமீபத்திய தேர்தலுக்கு முன்பு பதவியிலிருந்து மாற்றப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கடுமையான தோல்வியைச் சந்தித்தது. தலைவராக அண்ணாமலை இருந்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவீதமாக இருந்த கட்சியின் வாக்கு வங்கி, தற்போது 2 சதவீதமாகக் குறைந்துள்ளதை அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கல்விக் கொள்கையை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக அண்ணாமலை அண்மையில் அறிக்கை வெளியிட்டார். மத்திய அரசின் திட்டங்களை எப்போதும் ஆதரித்து வந்த அவர், முதன்முறையாக எதிர்ப்புக் குரல் எழுப்பியது தனிக்கட்சித் தொடக்கத்திற்கான அறிகுறி என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
நேற்று மாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த அண்ணாமலையின் காரில் பாஜக கட்சியின் கொடி கட்டப்படவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "ஓரிரு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், எல்லாவற்றையும் சொல்கிறேன்; இரண்டு நாட்கள் கழித்து அமர்ந்து பேசுவோம்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
டெல்லி சென்றுள்ள அவர், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஜூன் 4ஆம் தேதி தனது பிறந்தநாளன்று புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கோவை, மதுரை, திருப்பூர், நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரது பிறந்தநாளையொட்டி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் "துரோகிகளை வென்றெடுக்க 2.0 அவதாரம் எடுக்கும் தலைவருக்கு வாழ்த்துகள்" எனவும், ராஜபாளையத்தில் நடைபெற்ற நற்பணி மன்றக் கூட்டத்தில் "அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்" எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழக அரசியலிலும், பாஜக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)

உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகள் : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:18:01 PM (IST)

வ.உ.சி. துறைமுகத்தின் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத் கோரிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:34:56 PM (IST)










BabuJun 2, 2026 - 10:18:07 AM | Posted IP 162.1*****