» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 368 மனுக்கள் பெற்றார் ஆட்சியர் விஷு மகாஜன்!

திங்கள் 1, ஜூன் 2026 8:33:13 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன. இன்றைய கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குதல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி மனுக்களை அளித்தனர்.

மேலும், தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, புதிய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தேவைகள் அடங்கிய மொத்தம் 368 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டன. இந்த மனுக்களைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சித் தலைவர், அவற்றின் மீது காலம் தாழ்த்தாமல் உரியத் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தினார்.

முன்னதாக, கூட்டரங்கிற்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் நேரடியாகச் சென்று அவர்களை நேரில் சந்தித்தார். அவர்களின் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர், அவர்களின் குறைகளைக் கனிவுடன் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர்  மூ. குருச்சந்திரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா. கௌதம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) நாகராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த மாவட்ட அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory