» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளநிலை படிப்புகளுக்கான மாணவியர் சேர்க்கை: ஜூன் 5-ல் கலந்தாய்வு தொடக்கம்!

திங்கள் 1, ஜூன் 2026 8:24:46 PM (IST)

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை (UG) முதலாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இது குறித்துக் கல்லூரியின் முதல்வர் (முழு கூடுதல் பொறுப்பு) ஜோசப் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கலந்தாய்வு கால அட்டவணை:

ஜூன் 5 மற்றும் 6: சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி, முன்னாள்/தற்போதைய ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவர்கள்).

ஜூன் 8 (திங்கட்கிழமை): கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் (சுழற்சி 1 மற்றும் 2).

ஜூன் 9 (செவ்வாய்க்கிழமை): வணிகவியல் (சுழற்சி 1 மற்றும் 2).

ஜூன் 10 (புதன்கிழமை): வணிக நிர்வாகவியல் (BBA).

ஜூன் 11 (வியாழக்கிழமை): தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைகள்.

எடுத்துவர வேண்டிய சான்றிதழ்கள்:

கலந்தாய்விற்கு வரும் மாணவிகள் தங்களது இணையதள விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் சான்றிதழ்களின் அசல் (Original) மற்றும் 3 செட் நகல்களை (Xerox) கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்:

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்.

மாற்றுச் சான்றிதழ் (TC) மற்றும் சாதிச் சான்றிதழ் (Community Certificate).

வருமானச் சான்றிதழ் (Income Certificate).

அடையாள அட்டைகள் (ஆதார் கார்டு மற்றும் ஸ்மார்ட் கார்டு).

வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Passbook) முதல் பக்க நகல்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

முக்கியக் குறிப்பு: தகுதியுள்ள மாணவிகள் தங்களது பெற்றோருடன், குறிப்பிட்ட கலந்தாய்வு நாட்களில் காலை 9.30 மணிக்கு தவறாமல் கல்லூரிக்கு வருகை தந்து இந்த சேர்க்கை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory