» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கவின் கொலை வழக்கில் கைதான எஸ்ஐயை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 1, ஜூன் 2026 3:08:10 PM (IST)

தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் கொலை வழக்கில் கைதான எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை விடுவிக்கக் கோரி கயத்தாறில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் செல்வகணேஷ். ஐடி ஊழியரான இவர், காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை முதலில் பாளை போலீசார் விசாரித்த நிலையில், பின்னர் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை எஸ்ஐ சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்ப்பட்டனர்.
நேற்று முன்தினம் பெண்ணின் தாய் எஸ்ஐயான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை விடுதலை செய்யக் கோரி கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் பிஎம்டி மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் இசக்கிராஜா கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ், கயத்தாறு ஒன்றிய செயலாளர் மாடசாமி, கயத்தாறு ஒன்றிய இளைஞரணி தலைவர் அஜய் முருகன், ஆலங்குளம் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் மகேந்திர பாண்டியன், சவலாப்பேரி கிளைச் செயலாளர் மலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தையொட்டி கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









