» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய டீன் பொறுப்பேற்பு: அமைச்சர் ஸ்ரீநாத் வாழ்த்து!

திங்கள் 1, ஜூன் 2026 12:15:42 PM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய டீன் ஆக மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் பொறுப்பேற்றுள்ளார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் டீனாக பணிபுரிந்து வந்த சிவக்குமார் அண்மையில் தனது அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் புதிய டீனாக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டுப் புதிய டீன் ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய டீன் ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவர் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத்தை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாகப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory