» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மீது ஊழல் புகார் - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 1, ஜூன் 2026 11:34:01 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஐய்யப்பன், ஆதிகார துஷ்பிரயோக செயல்கள் மூலம் தொழிலாளர்களை துன்பப்படுத்துவதும், புரோக்கர்கள் (சில மேற்பார்வையாளர்கள்) மூலம் லஞ்ச லாவணியத்தில் ஈடுபட்டு, நிர்வாக சீர்கேடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
குறிப்பாக தமிழக அரசின் ஆணைப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 63 கடைகள் அடைப்பதாக அறிக்கை செய்து 18 கடைகள் மட்டுமே கடை பணியாளர்களுக்கு மூடிவிட்டு மூடிய கலந்தாய்வு மூலம் மாற்று கடையில் பணியாளர்களை நியமிப்பதாக அறிவிப்பு செய்து, தொழிலாளர்கள் கேட்ட கடைகள் காலியாக இருந்தும் புரோக்கர்கள் ஆலோசனைபடி கொடுக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து பணியாளர்களை நியமிப்பது தொழிலாளர்கள் வேதனைபடும் விதியுமாக உள்ளது.
மேலும் இவரால் லஞ்ச லாவணியத்தில் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் சீரழிந்து கொண்டு இருப்பதால் மாவட்ட ஆட்சி தலைவர் இவ்மனுவை ஏற்று விசாரித்து டாஸ்மாக் மேலாளரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்கள் சார்பாக ஏஐடியூசி சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









