» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறில் ஆற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை? போலீசார் தீவிர விசாரணை
திங்கள் 1, ஜூன் 2026 11:24:42 AM (IST)
குரும்பூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக பெயிண்டிங் தொழிலாளி ஒருவர், ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் பூந்தோட்டம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் நயினார் மகன் முருகன் (38). இவர் பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்குச் சந்தனமாரி (30) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி சந்தனமாரி செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப விவகாரங்கள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று காலையும் தம்பதியினருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மனைவி சந்தனமாரி மருத்துவமனை வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த முருகன், மது போதையில் அங்குள்ள ஆற்றுப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார்.
இதனிடையே அவ்வழியாக நடந்து சென்ற அவரது நண்பர், பாலத்தின் கீழே முருகன் தண்ணீரில் மூழ்கிக் கண்டு அதிர்ச்சியடைந்து அவர், உடனடியாகப் பொதுமக்களுக்கும் முருகனின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து முருகனின் அண்ணன் ராஜ்குமார் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆற்றில் கிடந்த முருகனை மீட்டு உடனடியாகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு முருகனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து முருகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









