» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இன்ஸ்பெக்டர் திலீபன் சஸ்பென்ட்: நெல்லை சரக டிஐஜி உத்தரவு!

திங்கள் 1, ஜூன் 2026 11:00:46 AM (IST)

பாலியல் புகார் எதிரொலியாக, ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் திலீபனை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக டிஐஜி தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் திலீபன். இவர் அங்கு பணியாற்றிய, தற்போது சிங்கப்பெண் அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள பெண் காவலர் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு மற்றும் மன உளைச்சல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும், இது குறித்துத் தட்டிக்கேட்க வந்த அந்தப் பெண் காவலரின் கணவரை, அனைவர் முன்னிலையிலும் தனது துப்பாக்கியை மார்பில் வைத்துச் சுட்டுவிடுவதாகக் கூறி ஆய்வாளர் திலீபன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தனியார் செய்திச் சேனல், மற்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

தன் மீது பரப்பப்படும் இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய ஆய்வாளர் திலீபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், "ஊடகங்களில் என் மீது பரப்பப்பட்டு வரும் செய்திகள் யாவும் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. இச்செய்தியின் உண்மைத் தன்மையை முழுமையாகத் தெரிந்துகொள்ள என்னிடமோ, என்னுடன் பணியாற்றும் சக ஆண் மற்றும் பெண் காவலர்களிடமோ அல்லது எனது ஊர் மக்களிடமோ உரிய விசாரணை நடத்திவிட்டுச் செய்திகளை வெளியிடுங்கள்" 

காவல் பணியை மிகவும் பொறுப்புணர்வோடும் சவாலோடும் விரும்பிச் செய்து வருகிறேன். என்னுடன் பணியாற்றும் சக பெண் காவலர்கள் தங்களது பணி விவகாரங்களிலோ அல்லது வேலைகளில் தொய்வு ஏற்படும் போதோ காவல் துறை ஒழுங்கு நடவடிக்கைக்காகக் கொஞ்சம் கண்டித்துத் திட்டியுள்ளேனே தவிர, எவ்விதமான பாலியல் அச்சுறுத்தலோ அல்லது மன உளைச்சலோ நான் யாருக்கும் கொடுத்ததில்லை. 

அங்கு பணிபுரியும் பெண் போலீசாரை என் சொந்தப் பிள்ளைகளாகவே நான் நினைத்து வருகிறேன். என் மீது அத்தகையதொரு புகாரைப் பெண் காவலர் கொடுக்க வாய்ப்பே இல்லை என நான் 100 சதவீதம் நம்புகிறேன் என்று அவர் அந்த வீடியோவில் பேசியிருந்தார். இந்நிலையில், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் திலீபனை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் தேஷ் முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory