» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சைக்கிளிலிருந்து தவறி விழுந்த முதியவர் சாவு!
திங்கள் 1, ஜூன் 2026 10:17:01 AM (IST)
மெஞ்ஞானபுரம் அருகே சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த 70 வயது முதியவர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள நங்கைமொழி கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் முத்து (70). இவர் ஆடுகளை வளர்த்து தொழில் செய்து வந்தார். நேற்று நங்கைமொழியிலிருந்து மெஞ்ஞானபுரத்திற்குத் தனது சைக்கிளில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அவர் பூச்சிக்காடு பாலம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாகச் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியது.
இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டுச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்து, சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









