» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்கம்பத்தில் பைக் மோதி ஏர்டெல் ஊழியர் பலி!
ஞாயிறு 31, மே 2026 8:26:47 PM (IST)
தூத்துக்குடியில் பைக் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதிய விபத்தில் ஏர்டெல் நிறுவன ஊழியர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் வடக்கு வள்ளியூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சிவா (27). இவர் தூத்துக்குடி அண்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்து, தூத்துக்குடியில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்ற சிவா, மாலையில் வேலை முடிந்தவுடன் இரவு உணவிற்காகச் சாப்பாடு வாங்குவதற்காகத் தனது மோட்டார் பைக்கில் அண்ணா நகரில் இருந்து புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடைக்குச் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்.
அவர் மேலூர் ரயில் நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. இதில் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பைக் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட சிவாவுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான சிவாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









