» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 30 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.தமிழர் நாகரிகத்தின் தொட்டிலான தாமிரபரணி நதிக்கரைப் பகுதிகளைக் கொடூர கொலைகளின் கூடாரமாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை என அவர் சாடியுள்ளார். தமிழகத்தில் நிலவும் இத்தகைய சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்: தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கைச் சிதைக்கும் திமுக அரசை, வரும் தேர்தலில் மக்கள் தயவுதாட்சண்யமின்றி நிராகரிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)









