» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர் சங்கம் சார்பில், "மகளிர் மேம்பாடு" என்ற கருப்பொருளின் அடிப்படையில் சர்வதேச மகளிர் தின விழா கயல் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன:
"பாரதி கண்ட பெண்ணுரிமை கனவு கனவேயானதா அல்லது நனவானதா?" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. குழு நடனம், பாடல் மற்றும் ஊமை நாடகம் (Mime) போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாலை 4 மணியளவில் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சீ.ஆ. சண்முகம் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.
மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பா. கணேசன் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே. பானுமதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக, மாணவர் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் அ. ஜெய்பிரகாஷ் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெருக்களில் தவித்த ஆதரவற்றோர் மீட்பு: சிகிச்சை முடிந்து முதியோர் இல்லத்தில் அனுமதி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 7:52:36 PM (IST)

குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:49:25 PM (IST)

செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

25 வருட பழைய பைப் லைனால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு - குமாரபுரம் மக்கள் போராட்டம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:06:08 PM (IST)

தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:51:14 PM (IST)

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி: ரூ.50,000 வரை பரிசு வெல்ல அழைப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:20:04 PM (IST)









