» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு ஏற்பாடு : கோட்டாட்சியர் தகவல்!

புதன் 8, மே 2024 12:38:38 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 11ஆம் தேதி நடைபெறும் "கல்லூரி கனவு” என்ற சிறப்பு முகாமில் வருவாய்த்துறை மூலம் அத்தியாவசிய சான்றுகள் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இது தாெடர்பாக தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் மி.பிரபு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2023-2024-ஆம் கல்வியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவ / மாணவியருக்கு உயர்படிப்புகள் மற்றும் வேலை / தொழில் வாய்ப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களால் ஆலோசனை வழங்கும் பொருட்டு "கல்லூரி கனவு” என்ற சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி தூத்துக்குடி கல்வி மாவட்டத்திற்கு 11.05.2024 அன்று தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள காமராஜ் கல்லூரிக்கு எதிர்புறம் அமைந்துள்ள "மாணிக்கம் மஹால் திருமண மண்டபத்தில்" வைத்து முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே முகாம் நடைபெறும் நாளில் உயர்கல்வி சேர்க்கையின் போது தேவைப்படக்கூடிய வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சாதிச்சான்று மற்றும் இருப்பிடச்சான்று உள்ளிட்ட அத்தியாவசிய சான்றுகளை உடனுக்குடன் மாணவ / மாணவியருக்கு வழங்கும் பொருட்டு மேற்படி முகாம் நடைபெறும் தூத்துக்குடி மாணிக்கம் மஹால் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அரங்குகளில் வருவாயத்துறைக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் இரண்டு கணிணிகள் அவற்றிற்கு தேவையான Printer மற்றும் Scanner ஆகியவற்றினை தயார் செய்து TACTV வட்டாட்சியருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரை தொடர்பு கொண்டு அன்றைய தினமே சான்றிதழ் கிடைப்பதை உறுதி செய்ய தூத்துக்குடி வட்டாட்சியருக்கு உத்திரவிடப்படுகிறது.

வருவாய்த்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் "வருவாய்த்துறை சான்றிதழ்கள் விண்ணப்பிக்கும் இடம்” என்ற தகவல் பலகை அமைப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் முகாம் நாளில் தேவையான பணியாளர்களை ஒதுக்கீடு செய்து மேற்கண்ட பணி தொய்வின்றி நடத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்திட தூத்துக்குடி வட்டாட்சியருக்கு இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.

மேலும் தூத்துக்குடி கோட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்களுக்கு மேற்காணும் பொருள் தொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்கி பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அன்றைய தினமே சான்றுகளை வழங்க தயார் நிலையில் வைத்திட அனைத்து வட்டாட்சியர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வருவாய் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory