» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் 100 அடிக்கு உள்வாங்கிய கடல் : காவல்துறை எச்சரிக்கை

வியாழன் 9, மே 2024 3:25:30 PM (IST)



திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கியுள்ள நிலையில், பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தென் தமிழக கடற்கரை, கேரளா உள்ளிட்ட கடலோரங்களில் கள்ளக் கடல் நிகழ்வால் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், திருச்செந்தூர் கடல் திடீரென சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. 

அப்போது சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஆபத்தை உணராமல் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து வந்தனர். இதையடுத்து, பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். திருச்செந்தூர் கடலில் கடந்த 5-ந்தேதி கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory