» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு!

வியாழன் 9, மே 2024 12:29:22 PM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த்,  மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோர் இணைந்து இன்று (09.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அய்யனடைப்பு ஊராட்சி கற்குவேல் நகர்(அன்பு நகர்) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 15ஆவது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.9.24 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளையும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி கருப்பசாமி நகரில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளையும், 

கணபதி நகரில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.27.75 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளையும், அதுபோல தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையண்ட் நகர் பகுதியில் தமிழ்நாடு  நகர்ப்புர சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் 21 இடங்களில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளில், மேற்கு பிரதான சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்சாலைப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த்,   நேரில் பார்வையிட்டு, தார்சாலையின் அளவு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, இராஜாஜி பூங்காவில் உள்ள 17 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு மற்றும் குளோரின் சரியான அளவில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்கள். மேலும், இராஜாஜி பூங்காவில் கூடுதலாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.13.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 15 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளையும் மற்றும் பிரதான பகிர்மானக் குழாய்கள் பதிக்கும் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன்,  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஜஸ்வர்யா,  மாநகராட்சிப் பொறியாளர் பாஸ்கர், மாநகராட்சி செயற்பொறியாளர் சரவணன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் ரவி  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory