» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் கோ.லட்சுமிபதி துவக்கி வைத்தார்!

திங்கள் 15, ஏப்ரல் 2024 11:50:01 AM (IST)



தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, இன்று (15.04.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024-ன்போது வாக்குப் பதிவின் முக்கியத்துவம் மற்றும் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் வகையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிறப்பு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் / மாணவர்கள்/ முதல் முறை வாக்காளர்கள்/ வாக்காளர்களிடையே வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இன்று மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory