» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தையின் ஆபாச வீடியோவை அனுப்பிய தாய் கள்ளக்காதலனுடன் போக்சோவில் கைது!

வெள்ளி 29, மார்ச் 2024 8:10:07 AM (IST)

ஏரல் அருகே 3 வயது பெண் குழந்தையின் ஆபாச வீடியோவை கள்ளக்காதலனுக்கு அனுப்பிய தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் புதுமனை தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் ராஜா. இவருடைய மகன் உதயகுமார் (42). இவர் ஏரல் மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், திருமணமான இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அந்த இளம்பெண் தனது 3 வயது பெண் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆபாச வீடியோக்களை உதயகுமாரின் செல்போனுக்கு அனுப்பினார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனை அறிந்த இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அவர் தனது மனைவி மற்றும் உதயகுமார் மீது ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், உதயகுமார் மற்றும் இளம்பெண் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உதயகுமாரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், இளம்பெண்ணை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர். 3 வயது குழந்தையின் ஆபாச வீடியோவை கள்ளக்காதலனுக்கு அனுப்பிய இளம்பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory