» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

த.மா.கா.வில் இருந்து விலகிய மூத்த நிர்வாகி : ஜி.கே.வாசன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

ஞாயிறு 24, மார்ச் 2024 6:59:33 PM (IST)

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூட்டணி கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் என்று முன்னாள் மாவட்ட தலைவர் கதிர்வேல் குற்றம்சாட்டினார். 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த கதிர்வேல் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது "ஆரம்ப காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் சுமார் 50-ஆண்டுகளாக பயணித்து பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கிய பின்பு ஜிகே வாசனுடன் அரசியலில் பயணித்து வந்தேன்.

மேலும்  நான் INTUC தொழிற்சங்கங்களுக்கு தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக இருந்து வருகின்றேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினை பொறுத்தவரை-யில் தோற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த காலங்களில் மத்திய அமைச்சர் பதவி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் மேல் சபை எம்பி பதவி கொடுத்த அதிமுக விற்கு துரோகம் என அவரை  உயர்த்தி பதவி கொடுத்த கட்சிகளுக்கு துரோகம் செய்தவர் ஜிகே வாசன். 

இப்போது பாரதிய ஜனதா கட்சியிடம் கூட்டணி வைத்துள்ளார். இங்கு சீட் வாங்கி அதனை அதிக விலைக்கு விற்று வருகின்றார். கடந்த 2016-ம் ஆண்டு  மக்கள் நல கூட்டணி-யில் பயனித்தபோது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தரப்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நின்றேன். அப்போது அந்த கூட்டணியில் அதிக வாக்குகள் பெற்றது நான்தான். சுமார் 20-ஆயிரம் வாக்குகள் அந்த தொகுதியில் வாங்கினேன். அதனடிப்படையில் தற்போது  தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டேன். ஆனால் அவர் தரவில்லை. 

என்னைவிட கூடுதலாக கேட்டவருக்கு சீட்டை விற்றுவிட்டார். இதனால் நான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். விலகிதற்கான காரணங்கள் குறித்து தபால் மூலம் தலைமைக்கு தெரியபடுத்தியது மட்டுமன்றி  தொலைபேசி மூலமாகவும் ஜிகே வாசனிடம் கட்சியில் பயணிக்க விருப்பம் இல்லை விலகி கொள்கின்றேன் என கூறிவிட்டேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனை பொறுத்தவரையில் கூட்டணி கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் என்று கதிர்வேல் குற்றம்சாட்டினார். 


மக்கள் கருத்து

உண்மைMar 25, 2024 - 05:10:45 PM | Posted IP 162.1*****

மோடி வந்தாலும் இவரை மதிக்க மாட்டார்

TUTIKARANMar 25, 2024 - 11:06:03 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி தொகுதி பிஜேபி க்கு கொடுக்காதது இமாலய தவறு. தமாக வில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறமுடியாது. காங்கிரஸ் வழி வந்தவர்கள் களத்தில் வேலை செய்ய மாட்டார்கள். தலைவராக மட்டுமே இருக்க விரும்புவார்கள். மேலும் இங்குள்ள தாமாக வேட்பாளர் திமுக அபிமானி, ஆகவே திமுக ஜெயிக்க வாய்ப்புஉண்டு. அதே சமயம் அதிமுக விற்கு குறிப்பிட கணிசமான பிஜேபி வாக்குகள் செல்லும்.

SrinivasanMar 25, 2024 - 06:40:46 AM | Posted IP 162.1*****

This man totally wrong person and he is sathi very pitha manithan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory