» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயம் வளம்பெற கலச விளக்கு வேள்வி பூஜை

ஞாயிறு 24, மார்ச் 2024 1:10:02 PM (IST)



ஆன்மிக குரு பங்காரு அம்மா அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 84வது அவதார பெருமங்கல விழா நடைபெற்றது. ஓம்சக்தி கொடியை குருவிகுளம் சேர்மன் விஜயலெட்சுமி ஏற்றி வைத்தார்.  மழைவளம் வேண்டியும், தொழில்வளம் சிறக்கவும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. 

குருபூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. வேள்வியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.  ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை மாவட்ட மகளிர் அணி தலைவி கே.பத்மாவதி வழங்கினார்.  அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி துவக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்ட துணைத் தலைவர் பண்டார முருகன், வட்டத் தலைவர் அழகர்சாமி, சித்தமருத்துவர் வேம்பு கிருஷ்ணன், தளவாய்புரம் மன்றம் ராஜ்,  இளையரசனேந்தல் முருகன், எட்டையபுரம் கன்னா, வானரமுட்டி நாறும்பூநாதன், முருகன், பிள்ளையார்நத்தம் மன்ற தலைவர் ராமலெட்சுமி, சின்ன கொண்டல்ராஜ், கோபிநாத், ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory