» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - கோயம்புத்தூர் ரயில் சேவையை மீண்டும் தொடங்க எம்பவர் இந்தியா கோரிக்கை

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 12:54:39 PM (IST)

தூத்துக்குடி - கோயம்புத்தூர் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர் ஏ.சங்கர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள மனுவில், "எம்பவர் இந்தியா என்பது கடந்த 33 ஆண்டுகளாக அடித்தட்டு சமூகங்களில் பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பாகும். UNEP & UNCCD அங்கீகாரம் பெற்றது மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்தின் சிறந்த நுகர்வோர் VCO விருதைப் பெற்றது. UN ECOSOC உடன் சிறப்பு அந்தஸ்தும் உள்ளது.

தூத்துக்குடி ரயில் பயணிகளுக்காக பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி - கோயம்புத்தூர் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும். தூத்துக்குடி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்க வேண்டும். ஏற்கனவே ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தூத்துக்குடி - மேட்டுப்பாளையம், தூத்துக்குடி - பாலருவி, மற்றும் தூத்துக்குடி - பாலக்காடு ஆகிய ரயில் சேவைகளை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

ஹரிகுமார்Apr 30, 2024 - 04:13:14 PM | Posted IP 162.1*****

எங்க இந்த தமிழ்நாட்டு எம்பி கள் போண்டாவும் வடையும் தின்னுட்டு பேசாம வந்துர்னுக......

O. G. ManoharanApr 30, 2024 - 05:07:07 AM | Posted IP 162.1*****

ரயில்வே துறையில் உள்ள ஓரு சில உயர் அதிகாரிகள் மனது வைத்தால் எதுவும் நடக்கும்.!

subramanianApr 29, 2024 - 07:53:02 PM | Posted IP 162.1*****

கண்டிப்பாக வரவேற்கவேண்டிய திட்டம் , நல்ல முயற்சி ,நன்றி

subramanianApr 29, 2024 - 07:52:40 PM | Posted IP 172.7*****

கண்டிப்பாக வரவேற்கவேண்டிய திட்டம் , நல்ல முயற்சி ,நன்றி

Muthukumar SaturApr 29, 2024 - 06:30:42 PM | Posted IP 172.7*****

Give representation to extend the 16721&16722 Coimbatore-Madurai-Coimbatore day time intercity expresses upto Thoothukkudi. It will remove the deficit of daily DAY TIME Train to Coimbatore from Thoothikkudi via Madurai Palani Udumalaipettai and Pollachi. In the metre-gauge era itself there was a passanger train in this same route. Also if it is extended, it will act as a connection train to and from for Tirunelveli Chennai Vandhe Bharath expresses at Madurai. It will connect Vandhe Bharath express to Kadambur Kovilpati Sattur and Thirumangalam passangers also

Public administratorApr 29, 2024 - 05:02:36 PM | Posted IP 162.1*****

எவ்வளவு மனு கொடுக்க முடியமோ கொடுத்துட்டே இருங்கய, கொடுக்குற மனு எல்லாம் சிவகாசி பேப்பர் கடைக்கு தான் போகும். வேற ஒன்னும் ஆகப்போறதில்ல. என்னத்த சொல்ல எல்லாம் பெல்லு பிரேக் இல்லாம போய்னுருக்கு. சொல்றதுக்கில்ல

BalamuruganApr 29, 2024 - 06:37:04 AM | Posted IP 172.7*****

👍👍👍👍👍👍👍

SSRajApr 28, 2024 - 07:59:36 PM | Posted IP 172.7*****

An intercity express may sought between Tuticorin and Coimbatore

ஓட்டு போட்ட முட்டாள்Apr 28, 2024 - 07:42:35 PM | Posted IP 172.7*****

முதல்ல மக்கள் தான் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை தான் செருப்பால் அடிக்க வேண்டும்.

RameshApr 28, 2024 - 04:51:02 PM | Posted IP 172.7*****

Thoothukudi to coimbatore rail சேவை கண்டிப்பாக வரனும்

TN69Apr 28, 2024 - 04:50:28 PM | Posted IP 172.7*****

எம்பவர் ஏ.சங்கரே தூத்துக்குடி எம்பி பதவிக்கு நின்று இருக்கலாமே!

ஆனந்த்Apr 28, 2024 - 04:23:58 PM | Posted IP 172.7*****

உருப்படியான செயல் ஒன்றும் கிடையாது

சந்திரன்Apr 28, 2024 - 04:21:54 PM | Posted IP 172.7*****

இவர் விளம்பரத்துக்கு ஏதாவது செய்தி வெளியிடுகிறார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory