» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பா.ஜ.க டிஜிட்டல் போர்டுகள் அகற்றிய மாந்கராட்சி : தூத்துக்குடியில் பரபரப்பு!

வெள்ளி 24, மார்ச் 2023 9:47:18 AM (IST)



தூத்துக்குடியில் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட போர்டுகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தியதைக் கண்டித்து பா.ஜ.க., வினர் போராட்டத்தால் ஈடுபட்டனர்.

பா.ஜ.கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தூத்துக்குடிக்கு இன்று காலை விமானம் மூலம் வருகிறார். பின்னர் அவர், தேவர், அம்பேத்கர், குரூஸ்பர்னாந்து, வ.உ.சிதம்பரனார், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அபிராமி மஹாலில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார். அண்ணாமலை வருகையையொட்டி பா.ஜ.க., வினர் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் டிஜிட்டல் போர்டுகள் வைத்திருந்தனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக கூறி பா.ஜ.க.,வினர் டிஜிட்டல் போர்டுகளை முழுவதும் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனையறிந்த பா.ஜ.க., வினர்  மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியசீலன், மாவட்ட துணைத்தலைவர் தங்கம் ஆகியோர் தென்பாகம் காவல் நிலையம் அருகே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் செய்ய முயற்சி செய்தனர்.



தகவலறிந்த தூத்துக்குடி டி.எஸ்.பி. சத்தியராஜ் மற்றும் தென்பாகம் சப்.இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் டிஜிட்டல் பேனர்களை மீண்டும் வழங்கினர். இதனையடுத்து மீண்டும் அதே இடங்களில் பா.ஜ.க.,வினர் பேனர்களை வைத்தனர். தூத்துக்குடியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

P.S. RajMar 25, 2023 - 11:37:04 PM | Posted IP 162.1*****

'பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக டிஜிட்டல் போர்டுகள் வைக்க கூடாது' என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ள நிலையில் கட்சிக்காரர்கள் இப்படி செய்வது எப்படி சரியாகும்? அரசு இதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்களை காவல்துறை சமாதானப்படுத்துவது சரியான செயல் ஆகாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory