» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பாஜக எதிராக அதிமுகவினர் முழக்கம் : அண்ணா நினைவு நாளில் பரபரப்பு

வெள்ளி 3, பிப்ரவரி 2023 3:11:57 PM (IST)



தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மறைந்த தமிழக முதல்வர், பேரறிஞர் அண்ணாவின் 54ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,  அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவருமான இரா. சுதாகர் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது கூட்டணி துரோகம் செய்துவிட்டதாக பாஜகவை கண்டித்து முழக்கமிட்டனர். 
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, பகுதி கழகச் செயலாளர் ஜெய்கணேஷ், நட்டார்முத்து சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, நடராஜன், பில்லா விக்னேஷ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளர் கல்விக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, சத்யாலெட்சுமணன், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், வக்கில் முனியசாமி, சரவணபெருமாள், பிராங்கிளின் ஜோஸ், கே.கே.பி.விஜயன், ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன்,  மாநகராட்சி கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து

JAI HINDFeb 3, 2023 - 03:38:50 PM | Posted IP 162.1*****

பயப்பட வேண்டாம் . பிஜேபி கட்சி EPS அணியுடன்தான் கூட்டணி. OPS அணி திமுகவிடம் கூட்டணி வைத்துக்கொள்வார்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory