» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு சர்வதேச சொகுசு கப்பல் வருகை!
புதன் 11, ஜனவரி 2023 3:12:53 PM (IST)

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் எம்.எஸ். அமேரா கப்பல் இன்று காலை தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு வந்தது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கப்பல்தளம் 5-ல் அமிரா பயணிகள் கப்பலில் பயணித்த விருந்தினர்களை பாரம்பரிய இசையான "நாதஸ்வர மங்கள இசை" இசைத்து மற்றும் நாட்டுப்புற நடனம் ஆடி வரவேற்கப்பட்டனர். கப்பலின் சுற்றுலா பயணிகள் வருகை வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன்., அமிரா கப்பலின் கேப்டன் கீயூபர்ட் வோலோயும், அவரவர் பாரம்பரிய நினைவுச்சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.
மேற்கு இந்திய பஹாமாஸ் தீவு கொடியுடன் வந்த எம். எஸ். அமிரா என்ற பயணிகள் கப்பலானது 204 மீட்டர் நீளமும், அதிகபட்சம் 44.8 மீட்டர் காற்று வரைவு, 13 அடுக்குகள் மற்றும் 413 தங்கும் அறைகளுடன், 835 பயணிகளைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. இக்கப்பல் அதிகபட்சமாக 20.5 நாட்ஸ் (Knots) (38 ஒருமணி நேரத்திற்கு) வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. ஜெர்மனியிலுள்ள பெர்ன்ஹார்ட் ஷீல்ட் பயணிகள் சேவை (Bernhard Schulte Cruise Service) மூலம் இயக்கப்படும் இப்பயணிகள் கப்பலில் மூன்று உணவங்கள், ஓய்வறைகள், நூலங்கள், விளையாட்டு, அழகு மற்றும் ஆரோக்கியத்திற்காக அறைகள் மற்றும் நீச்சல் குளங்கள் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும்.
இக்கப்பலில் பயணம் செய்யும் பயணிகள் பெரும்பாலும் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மார்க்கமாக கூடுதலாக 5 பயணிகள் இக்கப்பலில் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் சுற்றுலா பயணிகள் 70 பேர் திருநெல்வேலியிலுள்ள புனித திரித்துவ தேவாலயம் மற்றும் நெல்லையப்பர் கோயிலுக்கும், 200க்கு மேற்ப்பட்ட சுற்றுலா பயணிகள் தூத்துக்குடியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான புனித பனிமய அன்னை பேராலயம் (Our Lady of Snows Basilica) மற்றும் தூத்துக்குடியில் உ்ள்ள சுற்றுலா மையங்களை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் இன்று மாலையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கை துறைமுகம் புறப்பட்டு செல்ல உள்ளனர். இக்கப்பலில் வந்த வெளிநாட்டு பயணிகளை கையாளுவதற்கு சுங்கத்துறை, குடியுரிமை மற்றும் பொது சுகாதார அலுவலகங்களுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் செய்திருந்தது.
விழாவில் வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, குடியுரிமை துறை துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், சுங்கத்துறை துணை ஆணையர் சித்தார்த்தன், துறைமுக சுகாதார அலுவலர் பூர்னிமா, துறைமுக போக்குவரத்து மேலாளர் பிரபாகர், துணை வனபாதுகாவலர் பிரவீன்குமார் சிங், தலைமை பொறியாளர் ரவிக்குமார், தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் சுரேஷ்பாபு, செயலாளர் கிரிராஜ் சிங் ரத்தோடு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பள்ளியில் ரூ.20.70 லட்சம் திட்டப் பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 12:11:11 PM (IST)

வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:56:02 AM (IST)

தூத்துக்குடியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : பட்டப்பகலில் பயங்கரம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:47:25 AM (IST)

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தின பேரணி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:44:00 AM (IST)

அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:37:02 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.40லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு: ஒருவர் கைது!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:29:42 AM (IST)

தூத்துக்குடி மக்கள்Jan 12, 2023 - 08:24:25 AM | Posted IP 162.1*****